நீர்ப்பாசன செழுமை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அங்குரார்ப்பணம்!

நீர்பாபாசன செழிப்பு கிராமிய குளங்கள் புனரமைப்பு திட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தன்னிமுறிப்பிலுள்ள நாயாறு குளத்தின் புனரமைப்பு வேலைகள் இன்று (07)ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நீர்ப்பாசன செழிப்பு” திட்டத்தின் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 58 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தன்னிமுறிப்பு நாயாறு குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த வேலைத் திட்டத்தின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வேலைத் திட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்திற்காக சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள், திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள பொறியியலாளர், பிரதேச சபை தவிசாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், நீர்ப்பாசன பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்என பலரும் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.