காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்.

நீர்வேலி பிரதேசத்தில் “ஒல்லை வைரவர் கோவில் வீதியை” காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

ஜனாதிபதியின் அவர்களின் அறுவுறுத்தலின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் நாடு பூராகவும் அமைக்கப்பட்டு வரும் 1 லட்சம் கிலோமீற்றர் வீதிகளை காப்பெட் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டம் இன்று (20) யாழ் மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட “நீர்வேலி ஒல்லை வைரவர் கோவில்“ வீதியை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதனால் அடிக்கல் நாட்டி அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வீதியானது 5.66 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட பிரதம பொறியிலாளர் வி.சுதாகர், பிரதேசசபை செயலாளர், வீதியில் குடியிருக்கும் மக்கள் என பலர் பலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளிற்க்கு அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ‘காப்பெற்’ வீதி தொடர்பான தெளிவூட்டலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையனரால் மக்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில் புனரமைக்கப்படவுள்ள இக் காப்பெற் வீதியானது நெடுங்கால பாவனை தரத்தை கொண்டு குறைந்தது 20 வருட காலம் பாவிக்க உகந்த வீதியாக காணப்படும். யாழ் மாவட்டத்தில் இந்த வீதிக்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவர வேண்டிய சூழ்நிலையால் இந்த வீதிக்கான செலவு வழமையாக அமைக்கப்படும் பிரதேச சபை வீதிகளின் செலவுகளை விட அதிகமானவை. அத்தோடு இவ் வீதி புனரமைப்புகளின் போது வடிகாலமைப்புகள், போக்குகள் உள்ளடங்கலாக பல வருட காலத்துக்கு உத்திரவாதம் அளிக்க கூடிய வகையில் புனரமைக்கபடும்.

Leave A Reply

Your email address will not be published.