கிளிநொச்சியில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட பின் வடக்கில் பாதுகாப்பு இறுக்கப்பட்டது

கிளிநொச்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் வடக்கில் பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் உள்ளூர் குண்டுகளை தயாரிக்க முயற்சி மேற்கொண்ட போது அது வெடித்துள்ளது. அதன் பின் பாதுகாப்புப் படையினர் அப்பகுதி பாதுகாப்பு தொடர்பாக பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர்.

அதன்படி, பிரதான சாலைகளில் சந்தேகத்திற்கிடமானோர் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை பரிசோதனை செய்ய பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள குருமங்காடு பகுதியிலும் ராணுவம் பரிசோதனைக்கான தடை அரண்களை அமைத்துள்ளது.

Comments are closed.