யாழில் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று வடக்கு, கிழக்கில் நடைபெற்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி மற்றும் சமாதிக்கு இன்று காலை மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வு தந்தை செல்வா அறக்கட்டளைத் தலைவர் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் யாழ். பொது நூலகம் அருகில் உள்ள தந்தை செல்வாவின் நினைவிடத்தில இடம்பெற்றது.

கொரோனா அபாயம் காரணமாக ஐவருடன் மட்டும் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மலர் மாலை அணிவத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.