பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

தென்ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி
சென்சூரியன் மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவையான நிலையில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது .

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக பவுமா நியமிக்கப்பட்டதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி பங்கெடுத்த முதல் ஒருநாள் போட்டி ஆக இந்த போட்டி அமைந்தது .

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது .

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பாபர் அசாம் சதமடித்தார் ,பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 13 ஆவது சதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

இமாம்-உல்-ஹக் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் காணப்பட்டது .

இறுதி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில் இறுதி இரண்டு பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலை வந்தபோது பாகிஸ்தான் போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது .

பாபர் அசாம் இன்று தன்னுடைய 13 ஆவது சதத்தை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.