கிளிநொச்சி பிரமந்தனாறு குளத்திலிருந்து 500 ஏக்கர் சிறுபோக செய்கை!

கிளிநொச்சி பிரமந்தனாறு குளத்திலிருந்து 500 ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ள தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரமந்தனாறு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வது தொடர்பான கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது அக்குளத்தின் கீழ் 500 ஏக்கரில் செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டது.

12 அடி கொள்ளளவு கொண்ட பிரமந்தனாறு குளம் 3155 ஏக்கர் அடி நீர்கொள்ளளவு கொண்டதாகும். தற்போது 11′ 06″ நீர் காணப்படும் நிலையில் 2925 ஏக்கர் அடி நீர் காணப்படுவதாக நீர்பான பொறியியலாளர் செந்தில்குமரன் தெரிவித்தார்.

நீரின் அளவிற்கு அமைவாக இம்முறை 500 ஏக்கர் சிறுபோகம் மேற்கொள்ள முடியும் என தீர்மானம் எட்டப்பட்டது. அதற்கு அமைவாக அடுத்த வாரம் செய்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிறிமோகன், கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், நீர்பாசன பொறியியலாளர் செந்தில்குமரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், கமநல சேவைகள் மற்றம் கால்நடை நிணைக்களங்களின் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த வருடம் குறித்த குளத்தின் கீழ் 450 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இம்முறை மேலதிகமாக 50 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், கால்நடைகளிற்கான புல் வளர்ப்பிற்கும் மானியம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.