முகக் கவசங்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் – புதிய வடிவமைப்பிற்கான, 5 லட்சம் டாலர் வழங்கும் போட்டி

கொரோனா தடுப்புக்காக பாவிக்கும் முகக் கவசங்களால் தற்போதைய பயன்பாடு பல சுகாதார பிரச்சினைகளை எழுப்பியுள்ளதால், பயன்படுத்த எளிதான மற்றும் ஆரோக்கியமான ஒரு புதிய முகமூடி வடிவமைப்பிற்கு, 5 லட்சம் டாலர் பரிசு தொகையை ஒதுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உலகிற்கு ‘புதிய தலைமுறை முகக் கவசங்கள்’ தேவை என்று அமெரிக்க சுகாதார மற்றும் பொது சேவைத் துறை கூறுகிறது.

தற்போது சந்தையில் இருக்கும் முகக் கவசங்களால் முகத்தின் அரிப்பு, தோல் ஒவ்வாமை மற்றும் மூடுபனி போன்ற படம் உருவாவது ஆகியவையுடன் மூச்சுத்திணறக்கூடிய பனி படலம் போன்ற தன்மை ஆகியவை கண்ணாடி அணிந்தவரின் கண்களில் பிடிப்பதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் அடங்கும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

முகக் கவசங்கள் அணியும்போது தகவல் தொடர்பு சிக்கல்கள் எழுகின்றன என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு மட்டுமே பங்கு கொள்ளக் கூடிய இந்த போட்டியை Mask Innovation Challenge: Building Tomorrow’s Mask என்று அழைக்கப்படுகிறது.

அங்கு, கோவிட் -19 வைரஸை விஞ்ஞான ரீதியாகத் தடுக்கும் மற்றும் மேற்கூறிய அசௌகரியங்களை அகற்றும் 10 முன்மாதிரிகளுக்கு போட்டியில் தலா 10,000 டாலர் வழங்கப்படும்.

மீதமுள்ள, 4 லட்சம் டாலர் சிறந்த கருத்தை உறுதிப்படுத்தும் ஐந்து பேருக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது.

அணிவது குறித்த சிக்கலான அறிவுறுத்தல்கள் இல்லாது, அதாவது அணிய எளிதான மற்றும் முழு பாதுகாப்பும் இங்கு கட்டாய விடயங்களாக உள்ளடக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.