20 ஆவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் கையளிப்பு.

கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிக்கு இவ் இல்லம் கையளிக்கப்பட்டது.

அமரத்துவம் அடைந்த இ. ரேவதி நினைவாக ஜெர்மனி தேசத்தில் வசிக்கும் க.ரகு நிதிப் பங்களிப்புடனும் கனடா தேசத்தில் வசிக்கும் ஏனையபிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடனும் மாற்றுத்திறனாளி சகோதரிக்கு இவ் இல்லம் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் இல்லத்தை ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் பொருளாளர் ம.ஜெஸ்மன் அவர்களும் அவரோடு. இணைந்து சிறப்பு அதிதியாக சகோதர நிறுவனமான மக்கள்நல்வாழ்வு மையத்தின் பொருளாளரான ஆசிரியர்
ச.சுந்தரச்செல்வன் கலந்து கொண்டு இல்லத்தை கையளித்துச் சிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.