கோட்டாபய – ஷி ஜிங்பிங் தொலைபேசியில் பேச்சு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குக்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொலைபேசி கலந்துரையாடல் நேற்று நிகழ்ந்துள்ளது.

அதன்போது சீன ஜனாதிபதி தனது தமிழ் – சிங்களப் புத்தாண்டு வாழ்த்துதலையும் இலங்கை ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உபாயமார்க்க பொருளாதார திட்டம், இலங்கையிலுள்ள சீன வேலைத்திட்டங்கள், வர்த்தக செயற்பாடுகள் எனப் பல விவகாரங்கள் பற்றியும் இதன்போது பேசப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் சீனா – இலங்கையின் உறவு மென்மேலும் பலம்பெற வேண்டும் என்ற புத்தாண்டு வாழ்த்துதலை அந்நாட்டு ஜனாதிபதி ஜிங்பிங், இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.