இளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில் மனதை நெகிழவைத்த சம்பவம்.நிகழ்வில்

இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வில் பிரிட்டிஸ் மகராணி தனித்து அமர்ந்திருந்தது மனதை நெகிழவைத்தது.

பிரிட்டிஸ் இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வில் பிரிட்டிஸ் மகாராணி தனித்து அமர்ந்திருந்ததை பார்த்தது மனதை வேதனைப்படுத்தும் காட்சியாக காணப்பட்டது என வனிட்டிபெயரின் அரசகுடும்பம் பற்றி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது ஒப்பிடமுடியாத இறுதிநிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களின் கமராக்கள் கௌரவமான விதத்தில் நடந்துகொண்டபோதிலும் கொரோனாவைரஸ் காரணமாக மகாராணி தனியாக அமர்ந்திருந்ததை பார்ப்பது மனதுக்கு கடினமான விடயமாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்டில் மனிதநேயம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் கொரோனாவைரஸ் காரணமாக பலர் இதேநிலையை அனுபவித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி வழியாக பார்த்தபலர் மகாராணியின் வேதனையை உணர்ந்திருப்பார்கள் அனைவரினதும் ஆதரவும் மகாராணிக்கானதாக காணப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாராணி மனவேதனையை துயரத்தினை வெளிப்படுத்தாதவர் ஆனால் அவர் மிகவும் தனித்துவிட்டார் எனவும் வனிட்டிபெயரின் அரசகுடும்பம் பற்றி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தனித்து அமர்ந்திருப்பதை பார்ப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாக காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.