பெங்களூர் அணி துரத்தியடித்து 10 விக்கெட்டுக்களால் பெரு வெற்றி.

2021 ஐபில் தொடரின் 16 ஆவது போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து பெங்களூர் அணி மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 178 எனற இலக்கை பெங்களூர் அணி வெறும் 16.3 ஓவர்களில் துரத்தியடித்து 10 விக்கெட்டுக்களால் பெரு வெற்றி அடைந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் முதலில் பந்து வீசியது. சிராஜின் வேகத்தில் ஆரம்பத்தில் தடுமாறிய ராஜஸ்தான் அணி சிவம் டூபி, ராகுல் தேவாட்டியாவின் அதிரடி மூலம் மீண்டது.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. சிவம் டூபி 46 ஓட்டங்களைப் பெற, சிராஜ் மற்றும் ஹர்சல் படேல் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பதிலளித்த பெங்களூர் அணி டேவிட் படிக்கலின் அதிரடியில் உதவியுடன் 16.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. கன்னிச்சதம் கடந்த படிக்கல் 101 ஓட்டங்களை விளாச, விராட் கோலி 72 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநாயகனாக படிக்கல் தெரிவானார். இவ்வெற்றியின் மூலம் விளையாடிய நான்கு போட்டிகளிலும் முழங்கிய பெங்களூர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

Leave A Reply

Your email address will not be published.