இந்தியா எமது நட்பு நாடு; முடியுமான உதவிகளை வழங்குவோம்! – இராணுவத் தளபதி கருத்து

“இந்தியா எமது நட்பு நாடு. அந்த அடிப்படையில் அங்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இலங்கை தன்னாலான மருத்துவ உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது. இது தொடர்பான உயர்மட்டப் பேச்சு நடைபெறுகின்றது.”

– இவ்வாறு கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“இந்தியாவில் கொரோனா வைரஸின் மாறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. அது அங்கு மிக வேகமாகப் பரவி வருகின்றது. இலங்கையிலும் தற்போது தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் பரவும் வைரஸ் இங்கு இல்லை.

இதேவேளை, இந்தியா எமது அயல் நாடு. அது எமது நட்பு நாடும்கூட. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல வேறுபட்ட துறைகளில் ஒத்துழைப்பு இருக்கின்றது.

இலங்கைக்கு கொரோனாத் தடுப்பூசியை முதன் முதலில் வழங்கிய நாடு. அந்த நாட்டுக்கு இலங்கை தன்னாலான மருத்துவ உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.