பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்.

60 வயதான சிவா தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாகவும் , நகைச்சுவையாளராகவும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.

பல முக்கிய கதாநாயகர்களுடனும் குறிப்பாக நகைச்சுவை நடிகர்களான வடிவேலு ,விவேக்குடன் அதிகமான திரைப்படங்களில் நடித்த இவர் நெல்லை பாசையில் பேசி நெல்லை சிவா என்ற பெயரையும் தனதாக்கிக் கொண்டவர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நாடகத்திலும் இவர் நடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சின்னக் கலைவாணர் விவேக் , நகைச்சுவை நடிகர் பாண்டு இவர்களின் இழப்புகளின் சோகங்களே மறையாத இந்த நிலையில் இவருடைய இந்த திடீர் மரணம் ரசிகர்களையும் திரை நட்சத்திரங்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இவருடைய மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய இறுதி கிரியைகள் நாளையதினம் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.