இஸ்ரேல்-காசா மோதல்: ஹமாஸ் குழுவின் ஆயுத வலிமையும், பலவீனமும்

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதல்களால் இரு தரப்பிலும் இறப்புகள், சேதங்கள், துயரங்கள் அதிகரித்துள்ளன. இது இது ஒரு நீண்ட கால மோதலாக மாறி வருகிறது.
இதில் இஸ்ரேல் வசம் வலிமை வாய்ந்த மிகப்பெரிய படை பலம் உள்ளது. தனது விமானப்படை, ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள், உளவு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு காசாவில் உள்ள இலக்கை சரியாக தாக்குகிறது இஸ்ரேல். ஆயுத தளவாடங்கள் உள்ள பகுதிகளை மட்டுமே இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பாலத்தீன மக்கள் வாழும் பகுதியில் ஹமாஸ் மற்றும் ஜிகாதிய அமைப்பினர் மிக நெருக்கமாக கலந்திருப்பது மற்றும் குடியிருப்புகளில் அவர்கள் மறைந்திருப்பது போன்ற காரணங்கள்தான் பொதுமக்களின் உயிரிழப்பு அதிகமாக முக்கிய காரணமாகியிருக்கிறது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமியவாத ஜிகாதி அமைப்பு, வலிமை குறைவான தரப்பாக கருதப்பட்டாலும், இஸ்ரேலை தாக்குவதற்கான ஆயுதங்களை கொண்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஏற்கெனவே பல உத்திகளை அவர்கள் கையாண்டு விட்டார்கள். காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த ஆயுதம் தாங்கிய ட்ரோன் ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர்.

இஸ்ரேலின் ராணுவ செய்திதொடர்பாளர் ஒருவர், “உயர்நிலை ஹமாஸ் பிரிவு” ஒன்று காசாவின் தெற்கிலிருந்து சுரங்கம் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றார்கள். ஆனால் இது குறித்து இஸ்ரேலிய ராணுவத்திற்கு முன்பே தெரிய வந்ததால் அந்த சுரங்கத்தை வெடிக்கச் செய்தோம்,” என்று தெரிவித்தார்.

பாலத்தீனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருக்கும் முக்கிய ஆயுதமாக தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை கருதப்படுகிறது. இம்மாதிரியான ஆயுதங்கள் எகிப்தின் சினாய் தீபகற்பத்திலிருந்து சுரங்கம் வழியாக கடத்தி வரப்படுவதாக நம்பப்படுகிறது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமியவாத ஜிகாதி குழுக்களுக்கான ஆயுதம் காசாவிற்குள் இருக்கும் அதிநவீன தயாரிப்பு இடங்களிலிருந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் பிற நாட்டு நிபுணர்கள், இந்த தொழிற்சாலைகளை அமைக்க வழிகாட்டியது எவ்வளவு முக்கியமாக இருந்தது என இரானியர்களுக்கு தெரியும் என நம்புகிறார்கள்.

இந்த ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகள்தான் இஸ்ரேல் தாக்குதலின் முக்கிய இலக்குகள்.

ஹமாஸிடம் உள்ள ஏவுகணைகள் குறித்து கணக்கிடுவது இயலாத காரியம்.

அதில் நிச்சயமாக ஆயிரக்கணக்கில் பல்வேறு வகையான ஆயுதங்கள் இருக்கக்கூடும். இருப்பினும் இஸ்ரேல் ராணுவம் இது குறித்த கணக்கெடுப்பை வைத்துள்ளது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள இஸ்ரேல் தயாராக இல்லை.

ஹமாஸின் அனைத்து செய்திதொடர்பாளர்களும், தற்போது நடக்கும் தாக்குதலை, “நீண்ட நேரம் தாங்குவதற்குரிய சக்தி ஹமாஸ் குழுவிடம் உள்ளது” என்றே கூறுகின்றனர்.

பாலத்தீன தரப்பில் பல்வேறு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் அதன் அடிப்படை கட்டமைப்பு புதியதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அந்த ஏவுகணைகள் நீண்ட தூரம் தாக்குவதாகவும், அதிக வெடிப் பொருட்களை கொண்டு செல்வதாகவும் உள்ளது.

சில குறிப்பிட்ட ஏவுகணைகளின் பெயர்கள் சிறிது குழப்புவதாக உள்ளது. ஹமாஸிடம் பல குறைந்த தூரத்தில் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. காசம் என்ற ஏவுகணை 10 கி.மீட்டர் அல்லது ஆறு மைல்கள் வரை சென்று தாக்கும். கட்ஸ் 101 சுமார் 16 கி.மீட்டர் வரை சென்று தாக்கும். சேஜில் 55 – இது 55 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்.

ஆனால் ஹமாஸ் குழுவினரிடம் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளான எம் – 75; 100கிமீட்டர் வரை தாக்கும் ஃபஜிர் – 120 கி.மீட்டர் வரை தாக்கும்; தி ஆர் – 160 – 120 கி.மீட்டர் வரை தாக்கும் மற்றும் சில எம் – 302 வகை ஏவுகணைகளும் உள்ளன. அவை 200கிமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்.

எனவே ஹமாஸிடம் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவை மொத்தமாக இலக்கு வைத்து அதிகப்படியான இஸ்ரேல் மக்கள் வாழக்கூடிய மொத்த கடற்கரை பகுதியையும் அச்சுறுத்தக்கூடிய ஆயுதங்கள் உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த மூன்று தினங்களில் இஸ்ரேல் மீது சுமார் 1,000 ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டதாக ராணுவம் தெரிவிக்கிறது. ஆனால் அதில் 200 ராக்கெட்டுகள் காசாவை தாண்டவில்லை.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலை நெருங்கும் 90 சதவீத ஏவுகணைகள் தங்களின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் இடைநிறுத்தப்படுவதாக சொல்கிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் இஸ்ரேலிய நகரான அஷ்கெலானை பாதுகாப்பும் பேட்டரி அமைப்பு பழுதடைந்துவிட்டது.

ஏவுகணை தாக்குதலை சமாளிக்க வெகுசில வழிகளே உள்ளன. நீங்கள் சேகரிப்பு அல்லது தயாரிப்பு இடங்களை இலக்கு வைக்கலாம். தரைவழி தாக்குதல் மூலம் நீங்கள் இலக்கு வைக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் ஏவுகணைகளை திருப்பி அனுப்பலாம்.

ஆனால் இங்கு அது சாத்தியமில்லை. பாலத்தீனத்திடம் கேந்திரிய அளவில் வசதிகள் இல்லை. அவர்களுக்கு செல்ல வழியும் இல்லை. ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்வதற்கான தரைவழி தாக்குதலும் சாத்தியமில்லை.

2014ஆம் ஆண்டு காசாவிற்குள் இஸ்ரேல் ஊடுருவியபோது பாலத்தீனத்தில் அதிகளவில் மக்கள் உயிரிழந்தனர். 1462 பொதுமக்கள் உட்பட 2251 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இஸ்ரேல் தரப்பில் 67 சிப்பாய்களும், 6 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

திரும்ப ராக்கெட்டுகளை செலுத்துவது, பதலடி கொடுப்பது ஊடுருவுவது எந்த பக்கத்திற்கும் பலனளிக்கவில்லை. அதிகபட்சமாக இருதாக்குதலுக்கு இடையில் உள்ள காலத்தில் அங்கு அமைதி நிலவுகிறது. தற்போதைய பதற்றம், இஸ்ரேல் பாலத்தீனத்தின் பிரச்னையை உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

இருப்பினும் அதிகப்படியான அரபு நாடுகள் இஸ்ரேலிடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பாலத்தீனத்திடம் இருந்து அரசியல் ரீதியாக விலகுவதாக அர்த்தம். தற்போதைய இஸ்ரேலிய தலைமை தலைவர்களின் கொள்கைகளில் இந்த பிரச்னை இருப்பதாக தெரியவில்லை எனவே இதற்கு எவ்வளவு சீக்கிரம் அமைதி ஏற்படும் என்பது தெரியவில்லை. அமைதியை நோக்கி முன்னேறும் முயற்சிகள் தேவை. இந்த பிரச்னைக்கு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றால் பிற நாட்டினரின் வலுவான முயற்சிகளும் தேவை. ஆனால் தற்போதைய சூழலில் இது நடைபெறுவதாக தெரியவில்லை.

ஜோனாத்தன் மார்கஸ்,

வெளிநாட்டு விவகாரங்களின் ஆய்வாளர்

Leave A Reply

Your email address will not be published.