மாட்டிறைச்சி தடை முதல் குண்டர் சட்டம் வரை -லட்சத்தீவு  நிர்வாகி பிரபுல் ஹோடா படேல் 

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசம் ஆகும் லட்சத்தீவு. இது 32 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் கவர்ச்சியான தோற்றம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. சூரியக்கதிர் முத்தமிட்ட கடற்கரைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புக்கு பெயர் பெற்றது. மலையாளத்திலும் சமஸ்கிருதத்திலும் லட்சத்தீவு என்ற பெயருக்கு ‘ஒரு லட்சம் தீவுகள்’ என்று பொருள் உண்டு.

இது ஒரு யூனியன் பிரதேசமாகும். தீவுகளின் மொத்த பரப்பளவு 32 சதுர கி.மீ. , இதில் பத்து  தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர் . இதன் தலைநகரம் கவரட்டி.  கரையோர நகரமான கொச்சியில் இருந்து அரேபிய கடலில் 220 முதல் 440 கி.மீ தூரத்தில் உள்ளது.  மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 இன் விவரங்களின்படி, லட்சத்தீவில் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும், இதில் ஆண் மற்றும் பெண் முறையே 33,123 மற்றும் 31,350. இங்கு வசிக்கும் பழங்குடி மக்களில் பெரும்பாலோர் லட்சத்தீவு மற்றும் அண்டை மாநிலமான மலையாள மொழி உரையாடும்  இஸ்லாமியர்கள் .

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

லட்சத்தீவின் முன்னாள் நிர்வாகி தினேஸ்வர் சர்மா திடீரென இறந்ததும் மோடியுடன் நெருக்கமாக கருதப்பட்ட பிரபுல் கோடா படேலை  2020 டிசம்பரில் லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, ​​ மாநிலத்தின்  உள்துறை பொறுப்பில் இருந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் பதவி ஏற்றதில் இருந்து லட்சத்தீவு மக்களுக்கு  ஒன்றன்பின் ஒன்றாக சோதனை ஆரம்பம் ஆனது. மக்களின் இயல்பான இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காது, மக்கள் விரோத கொள்கைகளை புகுத்த ஆரம்பித்துள்ளது மத்திய அரசு.

தீவுகள் சிறப்பு விதிகளின் கீழ் மது போதைப்பொருட்கள்  விற்பனைக்கு அனுமதி இல்லை, வெளியாட்கள் நிலம் வாங்க முடியாது, மேலும், வெளியாட்கள், நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியின்றி தீவுகளுக்கு செல்ல முடியாது.

மாட்டிறைச்சி தடை மற்றும் மதுவுக்கு தடை இல்லை

லட்சத்தீவில் மொத்த மக்கள் தொகையில் 96 சதவீதம் முஸ்லிம்கள்.  மாட்டிறைச்சி பொருட்களின், விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவை பிப்ரவரி 25, 2021 லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை வரைவின் கீழ் 2021 ல் தடை செய்யப்பட்டன.

மாட்டிறைச்சி மீதான தடை யூனியன் பிரதேசத்தில் அமைதியின்மையை உருவாக்கியுள்ளது, மக்கள்  இதை பகிரங்கமாக எதிர்த்தனர். இந்த வரைவின் படி, எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லட்சத்தீவில் எங்கும் மாட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சி பொருட்களை விற்கவோ, வாங்கவோ, சேமிக்கவோ அல்லது கொண்டு செல்லவோ முடியாது. கடத்தப்படும் மாட்டிறைச்சியைக் கைப்பற்றுவதற்கான அதிகாரம் வரைவு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அளிக்கிறது.

குற்றவாளிக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படலாம், மேலும் 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை, 2021’

இந்த புதிய விதிகள் மற்றும் சட்டங்கள் இங்குள்ள மக்களை மிகவும் எரிச்சலடைய் செய்துள்ளது.  புதிய ஒழுங்குமுறையின் கீழ் ‘நகர திட்டமிடல் அல்லது வேறு ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உள்ளூர் மக்களை அவர்களின் சொத்திலிருந்து அகற்றவோ அல்லது மாற்றவோ நிர்வாகிக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி. நிர்வாகியின் புதிய முடிவுகள் கேரளாவுடனான லட்சத்தீவின் உறவுகளை குறைப்பதாகவும் மங்களூரு துறைமுகத்தை சார்ந்து இருக்க வைப்பதகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவால் பல தசாப்தங்களாக தீவுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் பேப்பூரை மோசமாக பாதிப்படைய செய்யும் .  கேரளாவுடனான லட்சத்தீவின் உறவை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

 

லட்சத்தீவில்  கொரோனா

டிசம்பர் 5,2020 அன்று மத்திய அரசின் நிர்வாக அதிகாரியாக பிரபுள் கோடா பட்டேல் லட்சத்தீவில் கால் வைப்பது வரை ஒரு அமைதியான சுற்றுலாப் பகுதியாகவே இருந்துள்ளது. லட்சத்தீவுக்கு வருபவர்கள் கொச்சியில் 15 நாட்கள் தனிமைப்படுத்த பின்பே அனுமதித்துக் கொண்டிருந்தனர்.

பிரபுள் அதிகாரத்திற்கு வந்ததும் பின்பற்றி வந்த பல நடைமுறைகளை மாற்றியமைத்தார்.   ப்ரபுள் கோடாவின் கொள்கைகளால் இன்றைய தினம் 5000 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர். ஜனவரி 18, 2021 அன்று, லட்சத்தீபில்  முதல் கோவிட் கண்டுபிடிக்கப்பட்டது.  நான்கு மாத காலப்பகுதியில் – மே 17 வரை – லட்சத்தீவில் 4,986 வழக்குகளும் 14 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

குண்டர் சட்டம்

 மிகக் குறைவான குற்றங்கள் உள்ளன, சிறைகள் காலியாக உள்ளனவே லட்சத்தீவில். இந்நிலையில்  நிர்வாகியின் முடிவுகளை எதிர்ப்பவர்களை சிறையில் அடைப்பதற்காக  குண்டம் அமல்படுத்த பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி

கவரட்டி – “இந்தியாவின் பவள சொர்க்கம்” – ஸ்மார்ட் சிட்டி  வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகரம் கவராட்டியில் smart cityக்கு என 536.61கோடி ரூபாயில் துவங்கப்பட்ட செயல்திட்டம் லட்சத்தீவு அடிமட்ட மீன் பிடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க காரணமாகும் என்ற காரணத்தால் மக்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்த குண்டர் சட்டமும் மக்கள் மேல் பாய ஆரம்பித்துள்ளது.

லட்சத்தீவை காக்க வேண்டும் என்பது அனைத்து இயற்கை பாதுகாவலர்களின் கோஷமாக உயர்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.