சவுதி அரேபியா 11 நாடுகளுக்கான தடையை நீக்கியுள்ளது.

துபாய் உட்பட 11 நாடுகளுக்கான பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. இதன்மூலம் துபாயில் சவுதி வருவதற்காக காத்திருப்பவர்கள் நேரடியாக விமானம் மூலம் சவுதிக்கு வரலாம். இந்த தடை நாளை காலை 1 மணி முதல் நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தடுப்பூசி பெற்றவர்கள் சவுதியில் ஹோட்டல் தனிமைப்படுத்துதல் தேவையில்லை. தடுப்பூசி பெறாதவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தல் அவசியமாகும்.

ஐக்கிய அரபு , ஜேர்மனி, அமெரிக்க , அயர்லாந்து , இத்தாலி, போர்ச்சுகல் , பிரிட்டன் , சுவீடன் , சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் இருப்பினும் இந்தியா உட்பட ஒன்பது நாடுகளுக்கான தடை நீக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.