தங்கம் பவுன் ரூ.36,920

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.36,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து,கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் பவுனுக்கு ரூ.240 உயா்ந்து,ரூ.36,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயா்ந்து,ரூ.4,615 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயா்ந்து, ரூ.76.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயா்ந்து, ரூ.76,300 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,615

1 பவுன் தங்கம்………………………….36,920

1 கிராம் வெள்ளி………………………..76.30

1 கிலோ வெள்ளி………………………..76,300

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,585

1 பவுன் தங்கம்………………………….36,680

1 கிராம் வெள்ளி………………………..75.50

1 கிலோ வெள்ளி………………………..75,500.

Leave A Reply

Your email address will not be published.