நயன்தாராவின் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் வெளியானது..! வீடியோ

நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘இதுவம் கடந்து போகும்’ பாடல் சற்று முன்னர் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும், கதையின் நாயகியாகவும் நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தை… அவரது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், சில மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ’இதுவும் கடந்து போகும்’ பாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என, விக்னேஷ் சிவன் நேற்று, வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில் அந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மாஸ்க் போட்ட மனிதர்கள் இதில் காட்டப்பட்டுள்ளதால், இந்த கொரோனா காதலத்தை குறித்து இந்து ஹீலிங் சாங்கை படக்குழு வெளியிட்டுள்ளது என தெரிகிறது. மெலடி பாடலான இதை முதல்முறை கேட்டதுமே பலருக்கு பிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில், சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் நெஞ்சங்களை வருடும் விதத்தில் உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக பார்க்கப்பட்ட நிலையில், இந்த பாடலுக்கும் அதே விதமான எதிர்பார்ப்பு ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது. சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிகள் வீடியோ இதோ…

Leave A Reply

Your email address will not be published.