கேரளாவில் இருந்து காபூல் சிறை வரை

13 நாடுகளை சேர்ந்த 408 பெண்கள் ஆப்கான் சிறையில் உள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்த நான்கு இளம் பெண்கள் ஆப்கான் சிறைச்சாலையில் போரில் இறந்து போன தங்கள் கணவர்களின் குழந்தைகளுடன் உள்ளனர். இவர்களை சொந்த நாடுகளுக்கு திரும்ப அழைத்துச் செல்ல ஆப்கான் கட்டளை பிறப்பித்துள்ளது.
ஆனால் ISSI தீவிரவாத்  அமைப்பில் பணிபுரிந்து போரில்   மாண்ட இளைஞர்களின் துணைகளாக இருந்துள்ளதால், இவர்களுடைய தற்போதைய பின்புலத்தில் அச்சம் இருப்பதால்,  இந்தியாவிற்கு திரும்பி அழைக்கப் இந்திய அரசு முயற்சி எடுக்கவில்லை என அறிகிறது.
கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற இடத்தில் காதல் வயப்பட்டு காதலர்களுடன் நாடு கடந்தவர்கள் என்பதால், இதில் சில பெற்றோர்கள் தங்கள் அடையாளத்தை வெளியில் காட்டவே அச்சப்பட்டு இருக்கின்றனர்.  தங்கள் மகள்கள் காதல் கணவர்களுடன் வெளிநாடுகளில் வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கனவில் இருந்த பெற்றோருக்கு,   வெளிநாட்டு அரசியல் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சியாக உள்ளது.

இதில் ஒரு இளம் பெண் நிமிஷாவின் தாயார் பிந்து சம்பத்து, தன் மகளை மீட்க கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போராடி வருபவர்.  இந்திய அரசின் மவுனம்  இந்தியத் தாயின் பாசப் போராட்டத்திற்கு கிடைத்த பின்னடைவாக உள்ளது.  கேரளப் பெண்களை விசாரணைக்கு உட்படுத்தி இந்தியச் சிறையில் வைக்கலாம் என்று ஒரு குழுவினரும் இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று மறுபக்கமும் விவாதித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.