அபராஜிதோ (The Unvanquished)

சத்யஜித் ரே எழுதி இயக்கிய, அபராஜிட்டோ ,   பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் பெங்காலி நாவலான அபராஜிதோவின் கடைசி பாதியை அடிப்படையாக 1959 இல் வெளியான திரைப்படம்.  இது தி அப்பு முத்தொகுப்பின் இரண்டாம் பாகமாகும்.  முந்தைய படம் பதேர் பாஞ்சாலி (1955) முடிவடைந்த இடத்திலிருந்து இத்திரைப்படம் தொடங்குகிறது.

அபுவின் குடும்பம் வாரணாசியில், கங்கை நதிக்கு அருகில் ஒரு நகரில் குடியேறுகின்றனர்.  அபுவின் தந்தை ஒரு பூஜாரியாக பணிபுரிந்து வர, தாயார் சர்பஜயா (கானு பாண்டியோபாத்யாய்) மற்றும் தந்தை ஹரிஹர் (பினாக்கி சென்குப்தா) ஆகியோருடன் வசிக்கிறான் பாலகன் அபு.  பலபோதும் கணவரை

இழந்த விதவைகளுக்கான பிரார்த்தனையில், பாடல்களில், சொற்பொழிவில் தனது தந்தை நேரம் செலவிடுவதை கவனிக்கிறான்.

அபுவின் விருப்பம் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்பவரை அவதானிப்பது, நதிக்கரையில் நடக்கும் ஆசாரங்கள், மனிதர்களை கவனிப்பதில் கழிகிறது.  இப்படி மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தில்  தகப்பனார்  ஹரிஹரின் திடீர்  மரணம் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.

ஒரு பணக்கார குடும்பத்தில் பணிப்பெண்ணாக தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளார் அபுவின் தாயார். ஆனால் அந்த வீட்டில் தன் மகனையும் வேலை செய்ய வைப்பதை கண்டு தனது மாமாவின் உதவியுடன் சொந்த  கிராமத்தில் உறவினர்களுக்கு அருகில் வசிக்க முடிவெடுக்கிறார்.

ஒரு பூஜாரியாக வேலை செய்து கொண்டு உள்ளூர் பள்ளியில் சேர்ந்து படிப்பில் சிறந்து விளங்குகிறான் அபு.  தலைமை ஆசிரியரும் அவன் மீது சிறப்பு அக்கறை காட்டுகிறார்.  உயர் கல்வி கற்க ஸ்காலர்ஷிப்புடன் கல்கத்தாவில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர  தாயின் அனுமதி பெறுகிறான்.

அபு இல்லாத  வாழ்க்கை தாய்க்கு கடினமாக இருக்கிறது.  மகனின் நினைவாகவே  தாய்மையின்  மகிழ்ச்சி, தனிமை ஏக்கம் மற்றும் சோகம் ஆகியவற்றுடன் மல்லிடுகிறார் அபுவின் தாயார்.  இதே நேரம் அபு நகருக்குச் சென்று, பள்ளி நேரத்திற்குப் பிறகு, ஒரு அச்சகத்தில் வேலை செய்யத் தொடங்குகிறான். படிப்பிலும் முழு கவனத்தையும் செலுத்துகிறான்.

தாய்க்கு,  மகனுக்கான ஏக்கமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.  ஆனால் மகனுடைய படிப்பிற்கு தொந்தரவு ஏற்படாதவாறு தான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதையும் அபுக்கு வெளிப்படுத்தவில்லை.  அபு தனது தாயின்  உடல்நிலை சரியில்லாததைப் பற்றி அறிந்ததும் கிராமத்திற்குத் திரும்புகிறான்.  ஆனால்  தாய் இறந்துவிட்டதைக் கண்டு மனம் உடைந்து போகிறான்.

அபு முன் இரண்டு கேள்வி எழுகிறது. தனது கிராமத்தில் பூஜாரியாக பணியை தொடர்வதா அல்லது நகரத்திற்கு சென்று கல்வியை  தொடர்வதா?  தாயின் சாம்பலுடன் கொல்கத்தாவில் இறுதி சடங்குகளை செய்து கொள்கிறேன்  என்று மீண்டும் தனது பயணத்தைத் தொடங்குகிறான்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கும் மட்டுமல்ல, ஒரு வரலாற்றை பதிவது, கல்வியின் பெருமையை சொல்வது என ஒரு ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் அடங்கிய திரைப்படம் இது.

ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா, இத்திரைப்படத்தில்  ஸ்டுடியோ செட்களுடன் டிஃப்யூசர்களில் பவுன்ஸ் லைட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.

ரே 1958 இல் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான கோல்டன் கேட் விருதுகளையும், இந்த படத்திற்கான விமர்சகர்கள் விருதையும் வென்றார்.

இந்த படம் 1967 இல் டென்மார்க்கில் இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய அல்லாத திரைப்படத்திற்கான போடில் விருதை வென்றது.

. இது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான செல்ஸ்னிக் கோல்டன் லாரலை வென்றது.

லண்டன் திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் திரைப்பட நிறுவன விருதுகளில் இது FIPRESCI விருது மற்றும் விங்டன் விருதையும் பெற்றது.

இது வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் மற்றும் விமர்சகர்கள் விருது உட்பட 11 சர்வதேச விருதுகளை வென்றது.

இந்த படம் 1959 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த வெளிநாட்டு நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.