மதுரை டாஸ்மாக் கடைக்கு சூடம் ஏற்றி திமுகக்காரர் வழிபாடு: பெரும் சர்ச்சை!

தமிழ் நாடு : கொரோனா ஊரடங்கு தளர்வாக இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்டன.

கடைகள் முன்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு டாஸ்மாக் கதவுகள் திறக்கப்பட்டது.

இடைவெளிக்குப் பிறகு முதல் நாளான இன்று கடைகள் திறக்கப்படுகிறது. இதையடுத்து மதுரை அண்ணா பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள டாஸ்மாக் கடை முன் திமுகக்காரர் ஒருவர் கடை திறப்பதற்கு முன்பாகவே அங்கு ஆர்வத்துடன் காத்துக்கிடந்தார். குறிப்பிட்ட திமுக உறுப்பினர் கடைக்கு சூடம் ஏற்றி பூ தூவி கும்பிட்டு வழிபாடு நடத்தினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தொடர்ந்து கடை திறக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட திமுகக்காரர் 2 குவாட்டர் பாட்டில்களை வாங்கி வந்தார். வாங்கிவந்தவர் சற்றும் தாமதிக்காமல் நமது கேமிரா மேனுக்கு போஸ் கொடுத்தபடி ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு முத்தமிட்டார்.

தொடர்ந்து அவர் வித்தை காட்டுவது போல் சற்றும் தாமதிக்காமல் குவாட்டர் ஒன்றை ஓபன் செய்து அப்படியே தனது வாயில் வைத்துக் குடித்தார். அதில் பாதி அளவை குடித்துவிட்டு அவர் அங்கிருந்து வெட்கப்பட்டுச் சென்றார்.

அவரை தொடர்ந்து மதுப் பிரியர்கள் சிலர் டாஸ்மாக் கடை வாசலில் வரிசையில் காத்திருந்தனர். எனினும் கூட்டம் பெரியளவில் காணப்படவில்லை. போதுமான டாஸ்மாக் கடைகள் அனைத்து பகுதிகளிலும் இருப்பதால் வழக்கமான நேரங்களில் திறந்து வைத்தாலே கூட்டம் கூடாது என்பதுதான் உண்மை என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.