நியூஸ் 18 செய்தி எதிரொலி ஆபாச யூடியூபர் மதன் யூடியூப் சேனல் முடக்கம்

ஆபாச யூடியூபர் மதன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

பப்ஜி ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு கேம். விபிஎன் முறையில் இந்த விளையாட்டை இந்தியாவில் சட்டவிரோதமாக சிலர் விளையாடி வருகின்றனர். இந்த கேம்-க்கை இரவு பகல் பாராமல் விளையாடும் ஒரு கூட்டம் உள்ளது. இந்த விளையாட்டின் ட்ரிக்சை விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல். மதன் தனது யூடியூப்யில் அப்லோடு செய்யும் வீடியோக்களில் கேம்-க்கான ட்ரிக்ஸ்-யை விட ஆபாச வார்த்தைகள் அதிகமாக இருந்தது.

பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசும் மதன் யூடியூப் சேனல் மீது க்ரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்தப்புகாரின் அடிப்படையில் மதனின் மனைவி கிருத்திகா முதலில் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த மதனை தர்மபுரி மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஆபாச யூடியூபர் மதன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது யூடியூப் சேனல் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அவரது யூடியூப் பக்கத்தில் இரண்டு வருட வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.