கொரோனா வைரஸ் கந்தக்காடு மையத்தில் நீண்ட காலமாக இருந்துள்ளது – அனுர திசாநாயக்க

கொரோனா வைரஸ் கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்குள் உடனடியாக பரவவில்லை. அது சில காலமாக பரவி இருந்துள்ளது என ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

500 க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வர வாய்பில்லை. சில காலமாகவே முகாமில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. வெளியில் தெரியவில்லை.

இந்த சூழ்நிலைகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2 -3 நாட்கள் மிக அவதானமாக இருங்கள் என கூறிய அவர் சுகாதாரத்தின் மூன்று முக்கியமான பகுதிகள் என வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆரோக்கியத்தில் கவனமெடுங்கள் என ஜேவிபியின் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Comments are closed.