கணவர்களிடமிருந்து விவகாரத்து பெற்ற 252 இஸ்லாமிய பெண்கள்! என்ன காரணம்? ஆச்சரிய தகவல்

இந்தியாவில் மாநிலம் ஒன்றில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 252 இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஒரு ஆண்டில் 252 இஸ்லாமிய பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து விவகாரத்து பெற்றுள்ளதாக அறிக்கை கூறுகிறது. இவர்களில் பலர் விவகாரத்திற்கு பிறகு கணவர்களிடம் இருந்து உரிமையாக பெறப்படும் பணம் அல்லது சொத்தைக் கூட பெற விரும்பவில்லை என்பது தான் ஆச்சரியம்.

இந்த போதிலும், இந்த விவாகரத்திற்கு பின் பல பெண்கள், நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், மீண்டும் தங்கள் கணவர்களின் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் அதன் முழு விபரம் தெரியவில்லை.

டிரிபிள் தலாக் சட்டம், அதாவது கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்லாமிய பெண்களுக்காக, திருமண உரிமை மீதான பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பெண்கள் தங்கள் உரிமைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

தங்களுக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகின்றனர். Dainik Bhaskar வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரை 252 இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து செய்துள்ளனர்.

இந்த பெண்கள் எந்த செலவிலும் தங்கள் கணவருடன் வாழ விரும்பவில்லை. அந்த அறிக்கையின்படி, 622 வழக்குகள் மஸ்ஜித் குழுவின் ஆலோசனை மையத்தில் நிலுவையில் உள்ளன.

விவாகரத்து கோருபவர்களுக்கான ஆலோசனை அமர்வு மஸ்ஜித் குழுவால் நடத்தப்படுகிறது ஆலோசனை மையத்தின் ஆலோசகரான அப்தாப் அகமது, டிரிபிள் தலாக் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, பெண்கள் தங்கள் உரிமைகள் குறித்து அறிந்திருக்கிறார்கள்.

பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான நடைமுறைகளை அறிய மையத்திற்கு வருகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், திருமணமான இரண்டு அல்லது மூன்று மாதங்களில் விவாகரத்து பெறுவதையும் பார்க்க முடிவதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.