டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டதாக ஒரு கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு.

டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டதாக ஒரு கொரோனா நோயாளி வெல்லம்பிட்டிய – கிட்டம்பஹுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி ,குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட 38 வயதான ஆண் நோயாளி பொரல்லையில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

“தொழிற்சாலையில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே அந்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“நாங்கள் தற்போது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்புகளை போணியோரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ,அந்த பகுதியில் இருந்து வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.