19 அரச நிறுவனங்களுக்கு 4 மாதங்களில் மட்டும் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மின்சார சபை உள்ளிட்ட 19 அரச நிறுவனங்களுக்கு இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காலப்பகுதிகளில் அதிகளவான இழப்புகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கே ஏற்பட்டுள்ளது எனவும், குறித்த கூட்டுத்தாபனத்துக்கு 4 ஆயிரத்து 500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரச நிறுவனங்கள் அதிகளவு நட்டம் அடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.