ஆளுநர் சபை கதிரைக்கு கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சியில் பட்டியலிடப்பட்ட முதல் தர நிறுவன ஆளுநர் சபை பதவியை கிரிக்கெட் ஜாம்பவான் மகேலா ஜெயவர்தன ஏற்றுக்கொண்டார்.

“மஹேலவை ஜனசக்திக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக அவரது நீண்ட கால வரலாறு, ஒரு தொழில்முனைவோராக அவரது நிர்வாக நிபுணத்துவம் என்பன ஜனசக்தி வாழ்க்கைக்கு விலைமதிப்பற்றதாக இருக்கும்” என ஜனசக்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .

கொழும்பு, மும்பை, மணிலா, மாலைதீவு மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் வெற்றிகரமான உணவகங்களைக் நடாத்தும் அனுபவமுள்ளவராக கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன உள்ளார். ரியல் எஸ்டேட், விவசாயம் மற்றும் விருந்தோம்பல் ஆகிய பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.