கேரளா- இளம் பெண்களின் விபரீதமான முகநூல் விளையாட்டு!

ஜனவரி 5 ஆம் தேதி, கேரளாவின் கொல்லம் மாவட்டம், கல்லுவாதுங்கலில் ரேஷ்மா என்ற 24 வயது பெண்ணின் வீட்டின் பின்புறம் குப்பைக் குவியலில் அனாதமாக ஒரு பச்சிளம் குழந்தை கண்டு பிடிக்கப்பட்டதாகக்கூறி போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டது.   பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் குழந்தை  இறந்தது.

ஏறக்குறைய ஐந்து மாத விசாரணைக்கு பின்னர், அப்பகுதியில் உள்ள பல பெண்களின் டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து பரிசோதித்த பின்னர்  ரேஷ்மாவே குழந்தையின் தாய் என போலீசார் அறிவியல் சான்றுகளுடன் கண்டுபிடித்தனர். பொலிஸ் விசாரணையில் குழந்தையின் தாயார் ரேஷ்மா , தனது முகநூல் காதலர், அனந்துவின் அறிவுறுத்தியபடி தனது பச்சிளம் குழந்தையை கைவிட்டதாக போலீசாரிடம் கூறினார்.   ஆனால் அனந்துவை ஒருபோதும் சந்தித்ததில்லை அல்லது அவரது புகைப்படத்தைப் பார்த்ததில்லை என்பது காவல்த்துறைக்கு மேலும் குழப்பத்தை கொடுத்தது.    கணவர் விஷ்ணு, தன் மனைவி  கர்ப்பமாக இருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று போலீசாரிடம் கூறினார்.  ரேஷ்மாவை  ஜூன் 22 அன்று காவல்த்துறை கைது செய்தது.  இரண்டாவது குழந்தை தனது முகநூல் நண்பருடன் வாழ்வதற்கு ஒரு தடையாக இருக்கும் என்று நினைத்தால் குழந்தையை களைந்ததாக  கூறியிருந்தார்.

இந்நிலையில் ரேஷ்மாவின் கணவரின் சகோதரன் மனைவி ஆர்யா மற்றும் கணவரின் சகோதரி மகள் க்ரீஷ்மா ஆகியோரால் போலி ஐடி  உருவாக்கப்பட்டு ’அனந்து’ என்ற கற்பனையான காதலனன்  உருவாக்கப்பட்டதும், ரேஷ்மாவை காதலன் அழைப்பது போல பல இடங்களுக்கு  அலக்கடிக்கப்பட்டதும் பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது.  ஆரம்ப கட்டத்திலேயே, பேஸ்புக் ஐடி போலியானது என்று போலீசார் கண்டறிந்தனர், ஆனால், ரேஷ்மாவின் உறவினர்கள் அதற்குப் பின்னால் இருப்பதாக புலனாய்வாளர்கள்  க்ரீஷ்மாவின் காதலன் உதவியுடன் கண்டு பிடித்தனர்.   இளம் பெண்களின்  இந்த குறும்பு  விளையாட்டை பற்றி தான் முன்னமே அறிந்தேன் என  போலிஸுக்கு தெரிவித்து இருந்தார்.   மேலும் கைது செய்யப்பட்ட ரேஷ்மா தனது உறவினர் ஆர்யா கொடுத்த சிம் கார்டைப் பயன்படுத்துவதாகவும் போலீசார் கண்டுபிடித்தனர்.

சாத்தானூர் காவல்துறை முக்கியமான ஆதாரங்களை சேகரித்து வந்துள்ள நிலையில் குழந்தையின் தாய்  ரேஷ்மாவை  கைது செய்தனர்.  இதை அறிந்தவுடன் ஆரியா(வயது 24) மற்றும் கிரீஷமா(வயது 21)  இத்திக்கரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுமார் இரவு 8.30 க்கு  குளியல் அறையில்  பிரசிவித்த மூன்று கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை தனது தோட்ட வளப்பில் களைந்து விட்டு கணவருடன் இரவு நித்திரை கொண்டு எழுந்து, காலை குழந்தையை எடுத்து வந்து கணவர் வீட்டாரிடம் கொடுத்து விட்டு நாடகம் ஆடியது பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.