முதலாவது T20 போட்டி யில் மே.இ. தீவுகள் 18 ஒட்டங்களால் வெற்றி.

முதலில் துடுப்பாட்டம் செய்த மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. 146 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் முன்னணியில் இருக்கிறது. அபாரமாகப் பந்துவீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மே.இ.தீவுகள் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மெக்காய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சுழற்பந்துவீச்சாளர் வால்ஷ் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரும்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.