பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு,மன்னார் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் கற்பிக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் சித்திவிநாயகர் தேசிய பாடசாலையில் இடம் பெற்றுவருகின்றது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,மன்னார் நகர் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் கல்வி கற்பிக்கின்ற மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகவும் அதே நேரம் மன்னார் மாவட்ட கல்வி வலயங்களில் கல்வி கற்பிக்கின்ற ஏனைய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இன்றைய தினம் விசேடமாக பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதுடன் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்றைய தினம் இறுதி கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.