போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் எழுவர் ஹெரோயினுடன் மாட்டினார்கள்.

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலதெனிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 105 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நியங்கொட, கும்புரேகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிப்பன்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 8 கிராம் 640 மில்லிகிராகம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நவத்துடுவ, மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் 5 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹெரோய்ன் விற்பனையில் பெற்றுக்கொண்ட ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் குறித்த நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி, குபிக்கெல பிரதேசத்தில் 5 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 510 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிங்ஹேன பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எகொடஉயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்தில் 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்தில் 3 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 10 ஐச் சேர்ந்த 41 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.