மைத்திரி – முன்னிலை சோசலிசக் கட்சி பேச்சு.

முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் சந்திப்பு இடம்பெற்றது.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சமீரா கொஸ்வத்த, ரவீந்திர முதலிகே மற்றும் புபுது ஜயகொட ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், ஆசிரியர்களின் போராட்டம், உரம் பிரச்சினை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் பதட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.