முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும்.

முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறினார்.

நாட்டின் தொலைதூர பகுதிகளில், குறிப்பாக இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

தற்போது மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்கள் தயாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த சூழ்நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, விரைவில் பாடசாலைகளைத் திறப்பதே முதன்மை குறிக்கோள் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ,எனவே இந்த சூழலில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சென்று திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.