5ஆவது போட்டியிலும் வெற்றி பெற்ற வங்கதேச அணி 4-1 என டி20 தொடரை வென்றது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. 4வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

5வது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 4 ஓவரில் 40 ரன்களை சேர்த்து கொடுத்தனர். தொடக்க வீரர்கள் நயீம் 23 ரன்களிலும் மெஹிடி ஹசன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 பந்துகள் எதிர்கொண்டு ஷகிப் அல் ஹசன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

வங்கதேச அணியின் ரன் வேகத்தை ஷகிப் அல் ஹசனின் இன்னிங்ஸ் மந்தப்படுத்த, அதன்பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 20 ஓவரில் வங்கதேச அணி, 122 ரன்கள் மட்டுமே அடித்தது.

இந்த தொடர் முழுவதுமே படுமட்டமா பேட்டிங் ஆடி தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் படுமோசமாக பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் 14வது ஓவரில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 60 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

மேத்யூ வேட் 22 ரன்களும், மெக்டர்மோட் 17 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலத்தில் வெளியேறியதால் 62 ரன்களுக்கு சுருண்டது ஆஸி., அணி. இந்த போட்டியிலும் வெற்றி பெற்ற வங்கதேச அணி 4-1 என டி20 தொடரை வென்றது.

Leave A Reply

Your email address will not be published.