யாழ்ப்பாணம் – கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் பாரிய விபத்து (படங்கள்)

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றோடு,  கோப்பாயில் இருந்து கைதடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம்  ஒன்றும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்கு சேதமடைந்து  போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

சமிக்ஞை இலக்கங்கங்கள்  முடிவடைவதற்கு முன்னர்  மற்றைய பகுதிக்கு கடந்து செல்வதற்காக வேகமாக பயணிக்க முயன்றதால் ,  இரண்டு கனரக வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று  மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தின் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதோடு , குறித்த சம்பவத்தில் சமிக்ஞை விளக்கு பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் மயிரிழையில் உயிர் தப்பிள்ளார்.

விபத்து குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.