யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனோவால் மரணித்தோரின் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்வதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மாத்திரமே மின்சாரம் மூலம் சடலங்களைத் தகனம் செய்யும் வசதி இருக்கின்றது. தினமும் அங்கு நான்கு பேரை மட்டுமே மின்தகனம் செய்யக்கூடிய வசதி இருக்கின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் சரி, ஏனைய வைத்தியசாலைகளிலும் சரி கொரோனாவால் உயிரிழப்பவர்களை அங்குதான் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

கடந்த ஐந்து மாதங்களில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 140 பேரும், ஏனைய வைத்தியசாலைகளில் 16 பேரும் என்று மொத்தமாக 156 பேரை மின்தகனத்துக்கு அனுப்ப வேண்டி இருந்தபடியால் இன்னும் பல பேரின் சடலங்கள் தேங்கி இருக்கின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.