அமைச்சரவையிலிருந்து நீக்குவேன் :கோட்டா! இராப்போசனத்துக்கு வா : மகிந்த!

நேற்றுமுன்தினம் சுமார் 5 மணி நேரம் நடந்த அமைச்சரவைக் கூட்டம், பல கட்சிகளுடன் சேர்ந்து, நாட்டை மூட முன்மொழியாமல் , பின்னர்  நாட்டை மூடுவதாக எழுத்துப்பூர்வமாக சில மொட்டு கட்சியோடு உள்ள ஆதரவு கட்சிகள் அறிவித்தபோது,  ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தின் கெபினட் அமைச்சர்களான வாசு, உதயா மற்றும் விமல் மீது  கடும்  கோபத்திலிந்ததாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மூன்று அமைச்சர்களையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்கள் கடுமையான குற்றத்தைச் செய்ததாகவும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதாகவும் வசைபாடியுள்ளார். எனவே, அமைச்சரவையில் இருந்து உங்களை நீக்க முடியும் என  அமைச்சர் ஒருவரிடம் அவர்  தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தாங்கள், தங்களது கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதால் , மக்கள் பிரதிநிதிகளாக ,  அந்த அறிக்கையை வெளியிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு அமைச்சர் மட்டும் தனது கடிதத்தில் குறை இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தனது  தவறை சரிசெய்து, தேவைப்பட்டால் அடுத்த நாளே மற்றோர்  அறிக்கையை அளிக்க முடியும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தனது அதிருப்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்து,  இந்த அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஆனால் பிரதமர் மகிந்த, அவசரப்பட வேண்டாம்.  சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என   தெரிவித்து கோட்டாபயவை சமாதானப்படுத்தியுள்ளார்.

அதன்படி, அவர் வாசு, விமல் மற்றும் உதய ஆகியோரை தொலைபேசியில்  தொடர்ப்புகொண்டதோடு , மகிந்த ,  அவர்களை அன்று இரவே அலரி மாளிகையில்   இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து வரவழைத்து , அவர்களிம்  கலந்து பேசி பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அலரி மாளிகைக்கு வந்து ,  மகிந்தவின் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். அந்த விருந்தில் விமல், உதய, வாசு மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நட்புடன் இரவு உணவு விருந்து  4 மணி நேரம் அளவு நீடித்துள்ளது. இறுதியில் அனைத்து கோபத்தையும் மறந்து எல்லோரும் , இரவு 11.30 மணியளவில் விருந்து முடிந்து  திரும்பிச் சென்றுள்ளனர்.

– தேசயவிலிருந்து ….

Leave A Reply

Your email address will not be published.