அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் ….. பசில் அமைச்சரவைக்கு தெரிவிப்பு

அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக பசில் கெபினட் கூடிய வேளை  தெரிவித்துளார்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவினங்களை கடுமையாக கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் தொற்றுநோயால் அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்ட்ட வருவாய் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, இது இந்த ஆண்டு தொடர்ச்சியான செலவுகளை ஈடுகட்ட கூட போதாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான தொடர்ச்சியான செலவு ரூ.  2,69,400கோடி என மதிப்பீடு செய்திருந்தாலும் , அவற்றை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைக்கு அரசு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு, கட்டுமானம் மற்றும் திட்டங்களை நிறுத்த உத்தரவு

அரசினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை தொடங்கப்படாத திட்டங்கள், கொள்முதல், கட்டிடங்கள் கட்டுதல், கட்டிடங்களை சீரமைத்தல் போன்றவற்றை நிறுத்தி வைக்குமாறு நிதி அமைச்சகம் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை நிறுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

நலன்புரி நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் பட்டியலை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே மானியத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் கொடுப்பனவுகள் மற்றும் பில்களை கட்டுப்படுத்தல்

இதற்கிடையில், அமைச்சகத்தின் செயலாளர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களின் ஒப்புதலுடன், நிதி அமைச்சகம் சம்பளமில்லாத கொடுப்பனவுகள் மற்றும் செலுத்தப்பட்ட பில் தீர்வுகளை மதிப்பாய்வு செய்து உண்மையிலேயே சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அமைச்சகங்களின் செயலாளர்கள் தங்கள் நிறுவனங்களின் அலுவலர்களுக்கு செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை வட்டார அடிப்படையில் வந்து சேரும் திகதியில் மட்டுமே செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சேமிக்கப்படும் நிதியின் அளவு குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சகம் செயலாளர்களிடம் கோரியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.