பல இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் பொலிஸாரிடம் சிக்கினர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னான தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 50 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயினுடன் 29 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தப்பன்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 17 கிராம் 61 மில்லிகிராம் ஹெரோயினுடன் 33 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கிராண்டபாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 75ஆம் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் 32 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதி ராஜ மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 270 மில்லிகிராம் ஹெரோயினுடன் 33 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தம்ம தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 902 மில்லிகிராம் ஹெரோயினுடன் 35 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடித்தகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயினுடன் 23 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கந்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலசூரிய மாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான தயாரிப்புக்காக பயன்படுத்துவதற்குத் தயார் நிலையிலிருந்த 1080 லீற்றர் கோடாவுடன் 42 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்தான பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.