ஆப்கானிஸ்தானில் படிக்கும் பெண்களுக்கு புதிய ஆடைக் குறியீடு.

ஆப்கானிஸ்தானில் படிக்கும் பெண்களுக்கு புதிய ஆடைக் குறியீடு அறிவிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி ,தாலிபான் தீவிரவாதிகளின் முக்கிய நபராகக் கருதப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பெண்கள் உயர்கல்வி படிக்கத் தடையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ,ஆனால் ஆண் மாணாக்கர்களுடன் அருகே அமர்ந்து படிக்க அனுமதிக்க முடியாது என்றும், பெண்கள் ஹிஜாப் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் ஹக்கானி தெரிவித்துள்ளார். ஆனால் அதில் முகக் கவசம் கூடுதலாக அணிய வேண்டுமா என்பது குறித்த தகவல் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.