பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் கூரையிலிருந்து அரியவகையான ஆந்தை குஞ்சுகள்.

புத்தளம் மாவட்டத்தைச் ​சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரையிலிருந்து அரியவகையான மூன்று ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

அரிய வகையான இந்த மூன்று ஆந்தை குஞ்சுகளையும் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர். எனினும் இந்த ஆந்தை குஞ்சுகளை அவர் வளர்க்கவில்லை.

வீட்டின் கூரையிலிருந்து அந்த ஆ​ந்தை குஞ்சுகள் மூன்றும் கீழே விழுந்துள்ளன. இதுதொடர்பில் புத்தளம் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினரின் கவனத்துக்கு அந்த எம்.பி கொண்டுவந்துள்ளார். அதனையடுத்து, அங்கிருந்து வந்த அதிகாரிகள், அந்த மூன்று ஆந்தை குஞ்சுகளையும் பிடித்துச் சென்றுவிட்டனர்.

Barn Owl எனும் விஞ்ஞானப் பெயரைக் கொண்ட அந்த அரிய வகையான ஆந்தைகளை இலங்கையில் கூடுதலாக காணமுடியாது. எனினும், களப்புகளுக்கு அண்மையில் சிற்சில இடங்களில் காணலாம்.

பிடிக்கப்பட்ட மூன்று ஆந்தை குஞ்சுகளும் மேலதிக பரிசோதனைகளுக்காக கால்நடை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என புத்தளம் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.