எஸ்.ரி.எப். சுற்றிவளைப்பில் ஐவர் வசமாக சிக்கினார்கள்.

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெபிலியவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 400 மில்லிகிராம் 51 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 209 புகைத்தல் பொருட்களுடன் 44 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 61ஆம் மைல்கல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 120 கிராம் கேரள கஞ்சாவுடன் 35 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களனிப் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் ஹெரோய்னுடன் 33 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மதுபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.