சாதார தர பரீட்சையில் அதிகஷ்ட பிரதேச வாகரை-பால்சேனை பாடசாலை முதலிடத்தில்.

கல்குடா கல்வி வலயத்தில் வாகரைப்பிரதேச பால்சேனை தமிழ் மகாவித்தியாலயம் இம்முறை சாதாரண தரப் பெறுபேறுகளின் தரப்படுத்தலில் முதலிடத்தில் வந்துள்ளது.

தொடர்ச்சியான வறுமை,இளவயதுத் திருமணம்,மந்திர பில்லி சூனிய மூட நம்பிக்கை.இவைகளையும் தாண்டி இச்சாதனை எட்டப்பட்து.

நகரத்தின் பிரத்தியேக வகுப்புக்கலாசாரத்தை முற்றிலும் புறந்தள்ளி கணித பாடம் உட்பட பலபாடங்களுக்கு நிரந்தர பயிற்றப்பட்ட ஆசிரியர்களே இல்லாத நிலையில் மிக எளிமையான முறையில் இச்சாதனை எட்டப்பட்டது.

நகர்ப்புறத்து பல்வேறு பாடசாலைகளின் பெறுபெறுகளையும் முறியடித்து வலயத்தின் 67%சராசரி சித்தியையும் தாண்டி 93% சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக வித்தியாலய முதல்வர் மு.நவரெட்ணம் தெரிவித்தார்.தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில் பாடசாலையின் பல்வேறு ஆசிரிய ஆளணிக்குறைபாடுகளுக்கு மத்தியில் பெற்றோர் பாதுகாவர் பங்களிப்புடன் ஆசிரியர்களின் அயராத அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலமாகவுமே இவ் வெற்றிச்சாதனை எட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இம்முறை வரலாற்றில் முதன் முதல் வாகரைப்பிரதேசத்தில் 9 அதிவிசேட சித்திகள் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

போராட்ட வடுக்களாலும் நில அதிர்வுப்பேரலையாலும் தொடர்ச்சியான பொருளாதார பின்னடைவாலும் வறுமையாலும் முடங்கிக்கிடந்த வாகரை சில வருடங்களாக சட்டத்தரணிகளையும் ஆசிரியர்களையும் கல்வி மான்களையும் அரச உத்தியோகத்தர்களையும் பெற்று வளர்ச்சியடைவது ம் குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலவருடங்களில் வாகரைப்பிரதேசத்தை வாகரை மக்களே வாழ்விக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு இடம்பெறுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.