மாதாந்த சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு நாளை முதல் பைஷர்.

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த நாள் பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு நாளை முதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பைஷர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோய்யியலாளர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த பைஷர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக இன்று (30.09.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை,உளநலசிகிச்சைக்கு செல்லும் சிறுவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் மாவட்டத்தில் குறித்த நாள்பட்ட நோயையுடைய பதிவு செய்யாத சிறுவர்கள் அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும் பதிவு செய்து கொள்பவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட தொற்றுநோய்யியலாளர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில் பெற்றோர்கள் குறித்த சந்தர்ப்பத்தை தவறவிடாது பிள்ளைகளை அழைத்து வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.