வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் முடக்கம்

உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் 20 நிமிடத்துக்கும் மேலாக முடங்கி உள்ளன. சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துளளது

இந்த நிலையில் வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் பல இடங்களில் முடங்கி இருக்கிறது.உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சேவை முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவைகள் முடங்கி உள்ளன. இன்ஸ்டாகிராமின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், சேவை முடங்கியதாக புகார் அளித்தனர்

20 நிமிடத்துக்கும் மேலாக
25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த திடீர் சேவை முடக்கத்தால் வாட்ஸ்-அப்பில் செய்திகளை அனுப்பவும், வரும் செய்திகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக இந்த சேவைகள் முடங்கி இருக்கின்றன.

வாட்ஸ்-அப் விளக்கம்
இந்த சேவைகள் முடக்கம் குறித்து, பயனர்கள் .ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், பல நாடுகளில் இந்த சேவைகள் இயங்ககவில்லை என்று ஹாஷ்டேக்கில் போட்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியுளளதாகவும், சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துளளது.

Leave A Reply

Your email address will not be published.