வெளிநாட்டு பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு புதிய மொபைல் செயலியினை நடைமுறைப்படுத்தல்….

வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவு பணவனுப்பல் வழிகளை அறிமுகப்படுத்துவதற்கான தேவையினை இனங்கண்டு, இலங்கைக்கென புதிய பணவனுப்பல் வழிகளை ஆய்வுசெய்து ஆலோசிப்பதற்கும் பணவனுப்பல் செய்யப்படுகின்ற செலவினைக் குறைப்பதன் மீது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி பணியாற்றுக் குழுவொன்றினை நியமித்தது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் எக்ஸியாட்டா, மொபிட்டல் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றிலுள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இப்பணியாற்றுக் குழு உள்ளடக்குகின்றது.

இலங்கைக்கு அதிக பணவனுப்பல்களைக் கவர்வதற்கு பயனர்கள் சுயமாகப் பதிவுசெய்தல், எந்தவொரு நாட்டிலிருந்தும் பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு உலகளாவிய பணப் பரிமாற்றல் தொழிற்படுத்துநர்கள் மற்றும் உலகளாவிய நிதியியல் தொழில்நுட்பங்கள் என்பவற்றுடன் இணைவதற்கான இயலுமை, இலங்கையிலுள்ள ஏதேனும் வங்கிக் கணக்கிற்கு/மொபைல் பணப்பைக்கு உடனடி நிதிப் பரிமாற்றல் போன்ற அம்சங்களுடன்கூடிய “SL-Remit” என்று பெயரில் தேசிய பணவனுப்பல் மொபைல் செயலியொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு பணியாற்றுக் குழு முன்மொழிந்துள்ளது. இதற்கு மேலதிகமாக, இச்செயலி நேரடி பட்டியல் கொடுப்பனவுகள், கவர்ச்சிகரமான வெளிநாட்டு செலாவணி வீதங்கள், குறைவான கொடுக்கல்வாங்கல் கட்டணங்கள் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கியிருக்கும்.

நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை வங்கியாளர்கள் சங்கம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் ஆகியன உள்ளடங்கலாக ஆர்வலர்களின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கி “SL-Remit” மொபைல் செயலியினை தற்பொழுது நடைமுறைப்படுத்தும்.

Leave A Reply

Your email address will not be published.