வருமான வரி பத்திரங்களை மீள புதுப்பிக்கும் நடவடிக்கை விரைவாக அதிகரிப்பு…..

கொவிட் பயணக்கட்டுப்பாட்டு கால எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தளர்வை தொடர்ந்து வருமான வரி பத்திரங்களை மீள புதுப்பிக்கும் நடவடிக்கைக்கான விண்ணப்பங்கள் ஒரே முறையில் சமர்ப்பிக்கப்படுவதினால் ,பிரதேச செயலகங்களில் வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் இடையூறுகள் எற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் அமைப்பு (ICTA) அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் மாகாண அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் அமைப்பினால் (ICTA) நடைமுறைப்படுத்தப்படும் மென்பொருள் கட்டமைப்பின் மூலம் நாடுமுழுவதிலுமுள்ள 900 இற்கு மேற்பட்ட மத்திய நிலையங்களில் வருடாந்தம் 6.5 வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக நாளாந்தம் 34 ,000 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதுடன் அலுவலக நேரங்களில் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை சுமார் 6,800 அதிகரித்துள்ளது. இருப்பினும், கொவிட் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 55,000 வரை அதிகரித்துள்ளது. அத்தோடு இது நூற்றுக்கு 60 வீத அதிகரிப்பாகும். அலுவலக நேரங்களில் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 11, 000 வரையில் அதிகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த மென்பொருளில் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிமுகப்படுத்தும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ,2022 ஆம் ஆண்டு மத்திய காலப்பகுதியில் இது நிறைவடையும். தற்பொழுது உள்ள விநியோக நிலைமையை இதன் மூலம் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

சுகா தார வழிகாட்டல்களுக்கு அமைவாக பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் அமைப்பு (ICTA சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.