புதிய சுகாதார வழிகாட்டுதல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் ஒக்டோபர் 16 முதல் எதிர்வரும் 31 வரையான புதிய சுகாதார வழிகாட்டுதல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

📌வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📌வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

📌திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது மண்டப கொள்ளளவில் 25சதவீதமானோரை உள்ளடக்கியதாகத் திருமண வைபவங்களை நடத்த சுகாதார வழிகாட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

📌மரண சடங்குகளில் கலந்துகொள்ள ஒரே தடவையில் 20 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📌சமய ஸ்தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

📌பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய 200க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை முதல் கட்டமாகத் திறக்க முடியும்.

📌பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும்.

📌முன்பள்ளிகளை 50சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு முன்னெடுக்க முடியும்.

📌பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📌பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக அனுமதிக்கப்படுவதுடன், பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவை இயங்க வேண்டும்.

📌திறந்த சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள் என்பனவும் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

📌உணவகங்களில் உணவு விநியோகத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📌நடமாடும் வர்த்தகங்கள் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

📌வர்த்தக நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வீட்டுப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 20 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

📌குறித்த இடங்களில் அனுமதிக்ககூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

📌வங்கிகள், நிதிநிறுவனங்கள், அடகு பிடிப்பு நிலையங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் 5 பேரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என்பதுடன் ஏனையோர் குறித்த இடங்களுக்கு வெளியே சமூக இடைவெளியை பேணியவாறு வரிசையில் நிற்க முடியும்.

📌கட்டுமாண தளங்களின் பணிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும்.

📌விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📌சிகையலங்கார நிலையம், அழகுக்கலை நிலையங்களில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க முடியும்.

📌திரையரங்குகளில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 25 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.