பப்புவா நியூ கினியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஓமன்.

டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பப்புவா நியூ கினியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஓமன் அபார வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்கியது. முதலில் தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கின்றன. டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஓமன் – பப்புவா நியூ கினி அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினி அணியில் கேப்டன் அசாத் வாலா மற்றும் சார்லஸ் அமினி ஆகிய இருவரும் மட்டுமே நன்றாக ஆடினார். அரைசதம் அடித்த கேப்டன் வாலா 56 ரன்னில் ஆட்டமிழந்தார். சார்லஸ் 37 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் அந்த அணி 129 ரன்கள் அடித்தது.

130 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஓமன் அணியில், தொடக்க வீரர்கள் ஆகிப் இலியாஸ் மற்றும் ஜதீந்தர் சிங் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அவர்களே போட்டியை முடித்துவிட்டனர். முதல் விக்கெட்டை கூட பப்புவா நியூ கினி அணியால் வீழ்த்த முடியவில்லை.

ஜதீந்தர் சிங் 73 ரன்களும், இலியாஸ் 50 ரன்களும் அடித்து 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்துவிட்டனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஓமன் அணி.

Leave A Reply

Your email address will not be published.