பெங்களூருவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17வயது சிறுவன் கைது!!

பெங்களூருவில் பெண் கத்தியால் குத்தப்பட்டு தீவைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் லாலுகான் – அப்ரீனா கானம் (வயது 28) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 19-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அப்ரீனா கானமை மர்மநபர் கத்திரிகோலால் குத்தி கொலை செய்து அவரது உடலில் தீவைத்து சென்றுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸாரின் சந்தேக பார்வை முதலில் அந்தப்பெண்ணின் கணவர் லாலுகான் மீது இருந்தது. சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு லாலுகான் வேலைக்கு சென்றிருந்தார். இதன்காரணமாக லாலுகானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

எனக்கு என் மனைவிக்கும் இடையே பிரச்னை இருந்தது உண்மைதான் ஆனால் நான் என் மனைவியை கொலையை செய்யவில்லை என போலீஸாரிடம் கூறினார். கணவன் – மனைவி இடையே என்ன பிரச்னை என விசாரித்துள்ளனர். அப்போது கல்லூரியில் படிக்கும் 17 வயதான எனது உறவுக்கார சிறுவனுடன் எனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனைக் கண்டித்தேன் ஆனால் அவர் கேட்கவே இல்லை. இதுதொடர்பாக 19-ம் தேதி காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த 17வயது சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரணை செய்துள்ளனர். அப்போது சிறுவன் அந்தப்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். நான் திட்டமிட்டு இந்த கொலையை செய்யவில்லை அந்தப்பெண் என்னை கொலை செய்ய வந்தார். என்னை தற்காத்துக்கொள்ள ஆத்திரத்தில் அவரை குத்திக்கொலை செய்தது. பயத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது உடலுக்கு தீவைத்து ஓடிவந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

போலீஸாரிடம் சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், “வீட்டில் பிரச்னை எனக் கூப்பிட்டார். நான் வீட்டிற்கு சென்றேன். நம்முடைய விவகாரம் என் கணவருக்கு தெரிந்துவிட்டது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்படுகிறது. நான் உன்னுடன் வந்துவிடுகிறேன் என்னை எங்காவது அழைத்துச்செல் எனக் கூறினார். நான் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து என்னை குத்த வந்தார். நான் பயத்தில் அந்த கத்திரிக்கொலை பிடிங்கி அந்தப்பெண்ணை சரமாரியாக குத்தினேன். இதில் அவர் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரது ஆடையில் நெருப்பு பற்ற வைத்துவிட்டு வந்தேன் எனக் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.